Monday, October 29, 2007

குதரிய கண்களில் வெட்கமும், வலியும் !


ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை...

கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில் என் உள்ளாடையில்
படிந்துவிட்டிருந்தன சில பார்வைகள்

கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன சில பார்வைகள்

கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

"முன்னாலே போமா" என்று
பின்னாலே தடவிவிட்டு போகும் நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில் கூனிக்குறுகி
என்னைப் போலவே சில திரௌபதிகள்

ஒவ்வொரு நிறுத்தத்திலும் மரணித்து
நிமிர்கிறது வாழ்க்கை

ஆண்டவா! எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை...


- முத்தாசென் கண்ணா


2 comments:

Krish said...

அருமையாக சொன்னீர்கள்...வாழ்த்துக்கள் உண்மை பேசும் உங்கள் கவி வாழ்க

Sinrasu said...

Thanks Krish. This is Muththasen's kavithai. From my view, this is an unavoidable thirst in every man, may be he can't let go of the image framed when he enters into the world, first feed of survival, that feel, chase him till he dies.