Wednesday, November 30, 2011

முடிவுகள் !

அவிழ்க அவிழ்க ஜனிக்கும்
என்றென்றும் முடிவுகள் !

நொடியின் திருப்பத்தில்
இழப்பா சரியா
அவிழ்த்ததும் பிறந்ததும் !

மறுபடி மறுபடி
நொடியில் தொடரும்
முடிவற்ற முடிவுகள் !

Wednesday, October 26, 2011

புரியாத மௌனம்::!


என் நண்பனின் வேதனை என் வார்த்தையில் :::

கண்ணீரின் கரையோரம் தத்தளித்த வினாடிகளில்
தோணியாய் நீ வந்தாய் !

பதின்மவயது முதல் அழுத முன்பகல் இருளும்
வெளிச்சமாயிற்று வார்த்தைகளில் !
அழிந்த நிஜங்கள் அழியாத வலிகள்
நிர்வாணமான என் முகம்
யாருக்கும் தெரியா என் யாவும் பகிர்ந்தேன் !

அன்பளிப்பாய் புரியாத மௌனத்தால்
அறைபட்டேன் !

காலத்தின் சதுரங்க கட்டத்தில்
நானிருக்கும் இடத்தில் நீயும் இருக்கலாம் !
அன்றேனும் என் வலி உன் விழி நீரில்
கரைந்து ஒழுகும் !

உள்ளே அழது
வெளியில் சிரிக்கும் உன் சிரிப்பில்
சிரிப்பும் அழுகும் அன்று !

நான் என்ன துராகம்
செய்தேன் உனக்கு ?
தொலை தூர நட்பாக கூட
பாவிக்காத உன் மாற்றத்திற்கு ?

நீயும் நான் சந்திந்த
மற்றும் ஒரு வேடதாரியா?
அன்பளிப்பாய் புரியாத மௌனத்தால்
அறைபட்டேன் !

காலத்தின் சதுரங்க கட்டத்தில்
நானிருக்கும் இடத்தில் நீயும் இருக்கலாம் !
அன்றேனும் என் வலி உன் விழி நீரில்
கரைந்து ஒழுகும் !

உள்ளே அழது
வெளியில் சிரிக்கும் உன் சிரிப்பில்
சிரிப்பும் அழுகும் அன்று !

நான் என்ன துராகம்
செய்தேன் உனக்கு ?
தொலை தூர நட்பாக கூட
பாவிக்காத உன் மாற்றத்திற்கு ?

நீயும் நான் சந்திந்த
மற்றும் ஒரு வேடதாரியா?

Friday, March 11, 2011

வேடங்கள்

உலகம் மனிதனை தான் என்ற மையத்தில் குவிக்கிறது. வேடங்கள் ஆதார வேர்களை புடிங்கி எரிகின்றது!

வர்ணங்கள்

வாழ்கை வர்ணங்களால் ஆனது. தினமும் வேறு வேறு கலவையில் இரவுகளும் பகல்களும். வர்ணங்கள் இல்லாவிடில், நிர்வாணமே நிஜம். பூச்சுக்கள் இல்லா முகங்கள் காலபெருவளியில் கரைந்து கிடக்கிறது. வர்ணங்களே வாழ்க்கை யானது.

Sunday, January 2, 2011

ஜனவரி ஒன்று 2011

வாழ்கை வண்ண வண்ண கலவைகளிலும் சில சமயம் சாக்கடையிலும் இழுத்து செல்கிறது. எது சரி எது தவறு மணித்துளிகள் வித்யாசப்படுதுகிறது.
மறுபடியும் ஒரு வருடம் இறந்து கிடக்கிறது. நாளைய விடியலில் நான் நீ வண்ணமா?? சாக்கடையா??

அபிராமி பட்டரின் பாடல்கள் சரிவர விளங்கவில்லை. ஆயினும் உடுகையான ஏக்கம் முகத்தில் அறைகிறது. வாழ்வின் ஆதர்ச சுருதியில் அம்பாளும் ஒரு அங்கம் தான்.

நான், நீ தனி தனி, உயிரற்ற பொருள்களும் தனி தனி, கனவுகளும் காயங்களும் தனி தனி, வெற்றியும் தோல்வியும் தனி தனி, இருந்தும் அனைத்தும் தனி தனி அல்ல!