மூன்றாம் வயது !
அறுத்து எடுத்து
தைத்து பின் பதுக்கிய
என் இருதயத்தில் இருந்து
நன்றி உங்களுக்கு !
கடந்து போன நிகழ்வுகளில்
ஒளிந்து இருந்த மகிழ்வும்
மனதிற்குள் மறைந்து
போன மௌனங்களாய்
வாழ்க்கை - தன் வண்ணங்களின்
அழகை தொலைப்பதே இல்லை !
மற்றுமொறு இலையுதிர் காலத்தில்
நன்றியோடு
நானே வருவேன் !
என்றும் அன்புடன்
திரு
Nov 2022
No comments:
Post a Comment