Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Saturday, July 4, 2009

ஆசான்

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம்
வாடித் துன்பமிக உழன்று -
பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -
நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல
வேடிக்கை மனிதரைப் போலே -
நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் -
இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து -
மதி
தன்னை மிகத்தெளிவு செய்து -
என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

- மகாகவி பாரதியார்

Thursday, June 18, 2009

பதின்ம வயது

நெஞ்சிருக்கும் வரை தான்
நினைவிருக்கும்
என்பார்கள் !

ஆனால் இவளுக்கோ
உன் நினைவிருக்கும் வரை தான்
நெஞ்சிருக்கும்!

- பள்ளி தோழி

Monday, January 26, 2009

இரண்டாம் பாகம்

குளம்படி ஓசைக் கவிதை
குதிரையின் கனைப்புக் கீதம்
வீசிடும் வாலே கொடிகள்
பொங்கிடும் னுரையே கடல்கள்
பிடரியின் வரைவே வயல்கள்
உருண்டிடும் விழியே சக்தி
குதிரையின் உடம்பே பூமி
சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு - இது
குதிரைகள் எனக்கு சொன்ன
வேதத்தின் இரண்டாம் பாகம்

- பாலகுமாரன்

Tuesday, October 30, 2007

Comfort Zone

What is your excuses? Have you ever tried to break your zone?




Adukalai


Monday, October 29, 2007

குதரிய கண்களில் வெட்கமும், வலியும் !


ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை...

கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில் என் உள்ளாடையில்
படிந்துவிட்டிருந்தன சில பார்வைகள்

கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன சில பார்வைகள்

கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்

"முன்னாலே போமா" என்று
பின்னாலே தடவிவிட்டு போகும் நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில் கூனிக்குறுகி
என்னைப் போலவே சில திரௌபதிகள்

ஒவ்வொரு நிறுத்தத்திலும் மரணித்து
நிமிர்கிறது வாழ்க்கை

ஆண்டவா! எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை...


- முத்தாசென் கண்ணா